தலைப்புச் செய்திகள்

“இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்”: அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்றத்தில் இன்னும் அதிக காலம் தான் இருக்கப் போவதில்லை என்று அர்ச்சுனா ராமநாதன் எம்பி இன்று (தெரிவித்தார்

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய – சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், தற்போது நாடாளுமன்றத்தில் தனது இறுதி நாட்களைக் கழித்து வருவதாக தெரிவித்தார்.

“நான் நீண்ட காலம் நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டேன். இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்” என்று அவர் சபையில் கூறினார்”.

“என்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குமாறு கோரி ஓசல ஹேரத் தாக்கல் செய்துள்ள வழக்கானது, சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை சிங்கள மக்கள் விரும்பவில்லை என்ற தவறான எண்ணத்தை உருவாக்கும்” என்றும் அவர் கூறினார்.