
ஹவுஸ் ஒஃப் பேஷன்ஸ் உரிமையாளரும் நிருவாகப் பணிப்பாளருமான பிரீத்தி ஜெயவர்தன, சுங்க விதிமீறல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் அவரின் வீட்டில் வைத்து கைது செய்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சுங்க மதிப்பீட்டுப் பிரச்சினை தொடர்பான ஒரு விசேட விசாரணையின் அடிப்படையில் அவர் கைதானார்.

பின்னர், கொழும்பு பிரதம நீதவான் வைத்தியசாலைக்கு சென்று, சந்தேக நபரை பார்வையிட்ட பின்னர், அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதன் பின்னர் அவர் சிறைக் காவலர்களின பாதுகாப்பில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


