சுங்கத் திணைக்களத்துக்க்கு 06 மாதத்தில் ரூ.1.37 ட்ரில்லியன் வருவாய்
🕔
இலங்கை சுங்கத் திணைக்களம், இந்த ஆண்டு ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில், முதல் 06 மாதங்களுக்கான தனது வருவாய் இலக்கைத் தாண்டி, ரூ. 1.37ட்ரில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது.
ஜூன் 30 அன்று முடிவடைந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்கான தனது வருவாய் இலக்கை திணைக்களம் தாண்டியுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவ தெரிவித்தார்.
ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கு இத்திணைக்களத்திற்கு ரூ. 1.0605 ட்ரில்லியன் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக ரூ. 313 பில்லியன் வசூலித்து அந்த இலக்கைத் தாண்டியுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு மொத்த வருவாய் இலக்காக 2026ஆம் ஆண்டுக்கான வருவாய் ரூ. 2.206 டிரில்லியன் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய செயல்பாடு தொடர்ந்தால், கடந்த ஆண்டு சாதனை அளவான ரூ. 2.5 ட்ரில்லியன் மொத்த வருவாய் வசூலை, சுங்கத்திணைக்களத்தால் தாண்ட முடியும் என்று புஞ்சிஹேவா நம்பிக்கை தெரிவித்தார்.
ஜூலை மாதத்திற்கு, சுங்கத்துணை களத்துக்கு ரூ. 192.4 பில்லியன் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், மாதத்தின் முதல் இரண்டு நாட்களுக்குள் ஏற்கனவே ரூ. 31 பில்லியன் வசூலிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மோட்டார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளதாக புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.