தலைப்புச் செய்திகள்

மாநகர சபை உத்தியோகத்தர்கள் இருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

காலி மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள், ரூ.5,000 லஞ்சம் கோரி, பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் இன்று (25) காலை கைது செய்யப்பட்டனர்.

ஹாட்வெயார் கடையில் விளம்பரப் பலகையை வைத்ததற்காக மாநகர சபைக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகையைப் பதிவு செய்யும் ஆவணத்தை வழங்கும் பொருட்’டு, மேற்படி இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காலை சுமார் 8.50 மணியளவில், காலி மாநகர சபையின் வருவாய் பரிசோதனைப் பகுதிக்குள் வைத்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.