
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் இன்று (25) சுமார் 05 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் ரூ. 19 மில்லியன் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, இவர் அழைக்கப்பட்டிருந்தார்.

2018 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட காலத்தில் மிரிஹான பகுதியிலுள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாயை – இவர் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த முதலீடுகளுக்கான வருமான ஆதாரம் தெளிவாக இல்லை எனக் கூறி, இவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


