
வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களால் ஆகக் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குறைந்தது 32 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 700 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நூற்றாண்டில் நாட்டைத் தாக்கிய மிகப் பெரும் நிலநடுக்கங்கள் இவை எனக் கூறப்படுகிறது.

1967-ல் நகரைத் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த ஒரு குடியிருப்பாளர்,
இந்தப் பேரழிவு – தான் இதுவரை அனுபவித்திராத ஒன்று என்று கூறியுள்ளார். சேதமடைந்த கட்டிடத்திலிருந்து தப்பித்த மற்றொரு குடியிருப்பாளர், “அந்தக் காட்சி ஒரு திகில் திரைப்படம் போல இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான தடைகள், அதி பணவீக்கம், அரசாங்க ஊழல் மற்றும் எண்ணெய் துறையின் தவறான முகாமைத்துவம் ஆகியவற்றால் முடங்கியுள்ள வெனிசுலாவின் பொருளாதாரத்தை , இந்த நிலநடுக்கம் மேலும் பாதிக்கும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.


