
காஸாவைவை மீண்டும் புனரமைப்பதற்கு 3000 கோடி டொலர் தேவையென காசா அமைதிச் சபை (The Gaza Board of Peace) மதிப்பிடப்பட்டுள்ளது.
காஸாவில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், காஸா முன்னெப்போதும் இல்லாத மனிதாபிமான மற்றும் புனரமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அத்தியாவசிய சேவைகள் சீர்குலைந்து வருகின்றன எனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
காஸா அமைதிச் சபை (The Gaza Board of Peace) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்;
போர் நிறுத்தம் ஏற்பட்டதிலிருந்து உதவிப் பொருட்கள் 70% அதிகரித்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 85% கட்டிடங்களும் வீதிகளும் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த சபை கூறியுள்ளது.

காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப 30 பில்லியன் டொலர் தேவைப்படும் என்றும், காஸாவின் புனரமைப்புக்காக இதுவரை சுமார் 17 பில்லியன் டொலர் உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.


