தலைப்புச் செய்திகள்

போர் வீரர்கள் தினத்துக்கு ஏன் மஹிந்த அழைக்கப்படவில்லை: கேள்வி அமைச்சர் விஜித ஹேரத் பதில்

போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுக்கு எந்த அரசியல் பிரமுகர்களும் அழைக்கப்படவில்லை என அமைச்சர் விஜித ஹெரத் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பத்தரமுல்லயில் நடைபெற்ற போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுக்கு ஏன் அழைக்கப்படவில்லை எனக் கேட்கப்பட்டமைக்கு பதிலளிக்கையில் அவர் மேற்படி பதிலைக் கூறினார்.’

“ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வத்தகல மற்றும் முப்படைகளும் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். வேறு யாரும் அழைக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.