
வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத்திலிருந்து தவறி விழுந்த மரண தண்டனைக் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டடத்திலிருந்து விழுந்தவர் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு மரணமடைந்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல அடித்து கொல்லப்பட்டமை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி என்பது குறிப்பிடத்தக்கது.

2022 மே 9 வன்முறையின்போது படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் கொலை வழக்கில், 12 பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் 11 பிப்ரவரி 2026 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


