தலைப்புச் செய்திகள்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போன முன்னாள் அமைச்சர்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் இந்த தோல்வியை சந்தித்துள்ளார்.

திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர், தவெக வேட்பாளர் சேதுபதி என்பவரிடம் ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கிறார்.

சேதுபதி 83,375 வாக்குகளைப் பெற்றார். பெரிய கருப்பன் 83,374 வாக்குகளைப் பெற்றார்.