
பெருந்தொகையான கஞ்சா செடிகளை தனமல்விலவில் உள்ள ஹம்பேகமுவ பொலிஸ் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹம்பேகமுவ – கரபிஞ்சலந்த பகுதியில் கஞ்சா செய்கை பண்ணப்பட்ருந்த பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றி வளைப்பில் சந்தேக நபர் ஒருவரும் கைதானார்.

அவ்விடத்தில் சுமார் 11,200 முதிர்ந்த கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வந்ததாகவும், அதன் மதிப்பிடப்பட்ட பெறுமதி ரூ. 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர், ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


