
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்திய அரசமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளை கூட்டணியிலிருந்து வெளியே வைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன், தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு 118 ஆசனங்கள் தேவையாக உள்ள நிலையில், தவெக 107 ஆசனங்களையே வென்றுள்ளது.

இந்த நிலையில் திமுகவுடன் கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 05 ஆசனங்களை பெற்றுள்ளது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில், இன்னும் 06 ஆசனங்கள் ஆட்சியமைப்பதற்கு தேவையாக உள்ளன.


