
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, நடிகர் விஜய்யின் த.வெ.கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக கட்சி கட்சி மூன்றுமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், அதிமுக இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு 118 தொகுதிகளைப் பெற வேண்டும்.

நடிகர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர் போட்டியிட்ட தொகுதியில் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேபோன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அவர் போட்டியிட்ட தொகுதியில் இரண்டாமிடத்துக்கு வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.


