தலைப்புச் செய்திகள்

பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க, நிரந்தர சிறப்பு அமர்வு நியமனம்

டகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசர் நிரந்தர அமர்வொன்றை (permanent Trial-at-Bar bench) நியமித்துள்ளார்.

இந்த விசேட மேல் நீதிமன்ற அமர்வில் நயனா செனவிரத்ன, நலின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகிய மூன்று நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட 2010 ஜனவரி 24 ஆம் திகதி இரவு காணாமல் போனார். இந்தச் சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் கடந்த போதிலும், அவருடைய மரணம் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.