8.6 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை
🕔
மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8.6 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்க விற்பனை செய்யவுள்ளது. இதில் இஸ்ரேலும் அடங்கும்.
காங்கிரஸ் (நாடாளுமன்றம்) அனுமதியை பெறாமலேயே இந்த ஆயுத விற்பனை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயுத விற்பனைக்காக காங்கிரஸின் அனுமதியை பெற வேண்டிய போதிலும், அவசரகால நிலையைக் காரணம் காட்டி, காங்கிரஸின் அனுமதியின்றியே – அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த வியாபாரத்தை விரைவுபடுத்தியுள்ளார்.
இதன்படி; கட்டார் சுமார் 05 பில்லியன், இஸ்ரேல் 992 மில்லியன், குவைத் 2.5 பில்லியன், ஐக்கிய அரபு ராஜியத்துக்கு 148 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவுள்ளன.