
நடிகர் விஜய்யை தமிழ் மக்கள் ஒரு தலைவராக மட்டும் நேசிக்கவில்லை என்றும், குடும்பத்தில் ஒருவராக கருதுகிறார்கள் எனவும், விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, விஜய்யின் த.வெ.கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ள நிலையில், விஜய்யின் தந்தை இதனைக் கூறியுள்ளார்.

”விஜய் கடந்த 30 ஆண்டுகளாக இந்த சமூகத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார்.
இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் போகிறார். தமிழ் மக்கள் அவரை ஒரு தலைவராக மட்டும் நேசிக்கவில்லை. குடும்பத்தில் ஒருவராக கருதுகிறார்கள்” என, சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.


