
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாம் குறித்து அவதூறான கருத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்தே, தேரரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூறிய குற்றத்துக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு, மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, அவர் சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, வண. ஞானசார தேரோவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


