தலைப்புச் செய்திகள்

திறைசேரியில் பணம் காணாமல் போனமை தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் உயிரிழப்பு

நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் டொலர் பணம், திறைசேரியில் இருந்து காணாமல் போனமை தொடர்பில் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவரான – ரங்க ராஜபக்ஷ எனும் உதவிப் பணிப்பாளர் உயிரிழந்துள்ளார்.

இவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள போதும், தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.

திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் பணம் காணாமல் போனமை தொடர்பில், நான்கு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் உயிரிழந்த உதவிப் பணிப்பாளரும் ஒருவர்.

உயிரிழந்தவரின் சடலம், குளியாபிட்டிவில் உள்ள – அவரின் வீட்டின் பின்புறம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திறைசேரியில் இருந்த 2.5 மில்லியன் டொலர் பணம் ஹேர்கர்களால் கையகப்படுத்தப்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.