
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், நரகத்தில் வாழ்வீர்கள் என்று, ஈரானை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தனது ட்ரூத் தளத்தில் அவர் இட்டிருக்கும் பதிவொன்றில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு நாளை திங்கட்கிழமை வரை, அவர் காலக்கெடு விதித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

‘ஈரானில் செவ்வாய்க்கிழமை மின் உற்பத்தி நிலைய தினமும், பாலம் தினமும் ஒரே நாளில் கொண்டாடப்படவுள்ளது. இதைப்போல் வேறு எதுவும் இருக்காது. அந்தப் பாழாய்ப்போன ஜலசந்தியைத் திறவுங்கள். இல்லையென்றால் நீங்கள் நரகத்தில் வாழ்வீர்கள், பொறுத்திருந்து பாருங்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என, அந்தப் பதிவில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தப் பதிவில், பல தூசண வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


