
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (05) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, 12.5 கிலோ எரிவாயுவின் விலை ரூ.775 அதிகரிக்கும். புதிய விலை ரூ.4,765.

05 கிலோ எரிவாயுவின் விலை 308 ரூபாவினால் அதிகரிக்கும். அதன்படி புதிய விலை 1,910 ரூபாவாக அமையும்.
இதேவேளை 2.3 கிலோ எரிவாயுவின் விலை 140 ரூபாவினால் அதிகரிக்கும். அதன்படி புதியவிலை ரூ.890ஆக அமையும்.


