தலைப்புச் செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் தாறுமாறாக அதிகரிப்பு

லாஃப்ஸ் சமையைல் எரிவாயுவின் விலைகளும் இன்று (05) நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

ஏற்கனவே லிட்ரோ எரிவாயுவுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் தனது எரிவாயுவுக்கான விலையை அதிகரித்துள்ளது.

அந்த வகையில் 12.5 கிலோவுக்கு 5700 ரூபாயாகவும், 05 கிலோவுக்கு 2280 ரூபாயாகவும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது லிட்ரோ எரிவாயுவின் விலையை விடவும் மிக அதிக விலை அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு இல்லாத நிலையிலேயே, இந்த விலை அதிகரிப்பு பற்றிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.