
ஈரானுக்கு எதிரான போர் தீவிரமா நடந்து வரும் சூழ்நிலையில் – ரஷ்யாவிடம் உலக நாடுகள் கச்சா எண்ணெய்யை கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதிக விலைக்கு தனது எண்ணெய்யை ரஷ்யா விற்பதற்குத் தீர்மானித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதாரா தடைகளை விதித்திருக்கும் நிலையில், ஈரான் ஜனாதிபதி புட்டினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்; “ஈரான் போரினால் கச்சா எண்ணெய் அதிகரித்துள்ளமையை எதிர்த்துப் போரிடும் பொருட்டு, சில நாடுகள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும்” என்றார்.
எனவே, முன்னர் தள்ளுபடி விலையில் தனது எண்ணெய்யை விற்றுவந்த ரஷ்யா, தற்போது அதிக லாபத்துக்கு விற்கத் தீர்மானித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், உலகத்துக்குத் தேவையான 20 வீத கச்சா எண்ணெய் கிடைக்காமல் போயுள்ளது.
இதனால் எண்ணெய்யின் விலை அதிகளித்துள்ளதால், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய அடி விழுந்துள்ளது.
ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆரம்பித்த போர், அமெரிக்காவின் எதிரி நாடான ரஷ்யாவுக்கே சாதகமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,



