தலைப்புச் செய்திகள்

இரண்டு கிலோ கஞ்சாவுடன் புத்தளத்தில் நபர் கைது

ரண்டு கிலோ கஞ்சாவுடன் புத்தளம் பிரதேசத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளை மன்னார் பிரிவு – குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

37 வயதான சந்தேக நபர் புத்தளம் – சாலியவெவ பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேக நபரையும் – கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.