தலைப்புச் செய்திகள்

வாகனங்களின் விலைகள் ஏப்ரல் முதல் அதிகரிக்கிறது: என்ன காரணம் என்பது பற்றியும் அறிவிப்பு

லங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் – ஏப்ரல் 1, 2026 முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

2026 வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் இந்த வரி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய வரி செயல்முறைக்கு உட்பட்ட வாகனங்களுக்கு இது பொருந்தாது என்றும் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அரோஷா ரொட்ரிகோ தெரிவித்தார். இந்த வரி இலங்கை சுங்கத்தால் நேரடியாக வசூலிக்கப்படும்.

கொழும்பில் இன்று (13) கொழும்பில் ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய ரொட்ரிகோ; வாகனங்களின் அதிக மதிப்பு காரணமாக – வரி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

“வாகனங்களின் அதிக மதிப்பைக் கருத்தில் கொண்டு, 2.5% வரி ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார். “உதாரணமாக, ரூ. 10 மில்லியன் விலை கொண்ட ஒரு வாகனம் சுமார் ரூ. 250,000 அதிகரிப்பைக் காணும். இதன் விளைவாக, வரி நடைமுறைக்கு வந்தவுடன் வாகன விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு – புதிய வரி பல வாகன வகைகளின் சந்தை விலைகளை பாதிக்கும் என்று சங்கம் எதிர்பார்க்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.