தலைப்புச் செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இழந்தார் சொஹாரா புஹாரி

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் சொஹாரா புஹாரி- அவரின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

கட்சி எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கையைத் தொடர்ந்து, அவரின் உறுப்பினர் பதவி பறிபோயுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, ​​கட்சியின் அறிவுறுத்தல்களை மீறி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, அவரை கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்துவதாக, முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.

இதனையடுத்து, அவரின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிபோயுள்ளது.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.