தலைப்புச் செய்திகள்

விமல் வீரன்ச மற்றும் ஸ்வர்ணவாஹினியிடமிருந்து தலா 01 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அமைச்சர் நளிந்த கடிதம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சி ஆகியவற்றிடமிருந்து தலா 01 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் கடிதங்களை தனது சட்டத்தரணிகள் ஊடாக – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அனுப்பியுள்ளார்.

அவதூறு மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டி, இந்த நஷ்டஈடு கோரப்படுகிறது.

பதிவு செய்யப்படாத மருந்து நிறுவனமொன்றின் உரிமையாளருடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, அமைந்நர் நளிந்த ஜெயதிஸ்ஸ இந்தியாவில் சுமார் 01 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கியதாக, பெப்ரவரி 06ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாளொன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது, அடிப்படையற்றது மற்றும் தீங்கிழைக்கும் செயல் என்று அமைச்சரின் அலுவலகம வெளியிட்டுள்ளயொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது அமைச்சரின் நற்பெயருக்கு கேடு விளைவிப்பதோடு, பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்வர்ணவாஹினி மாலை 6.50 மணிக்கு அதன் பிரதான செய்தி அறிக்கையின் போது இந்தக் குற்றச்சாட்டை ஒளிபரப்பியது. பிப்ரவரி 7, 2026 அன்று, “ஸ்டோரி ஒஃப் த டே” என்ற தலைப்பில் ஒரு விசேட பகுதியாக அதை வழங்கினார்.

அமைச்சரிடம் அந்தச் செய்தியை சரிபார்க்காமலும், அவருக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமலும் – இந்தக் கூற்றை ஒளிபரப்பியதாக ஒளிபரப்பாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி, பின்னர் – இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இது அமைச்சரின் நற்பெயருக்கு கேடு ஏற்படுத்தியதை மேலும் அதிகரித்துள்ளது.

இதனால், அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தனது சட்டத்தரணி மூலம் விமல் வீரவன்ச மற்றும் பென் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ஈஏபி பிராட்காஸ்டிங் கம்பெனி லிமிடெட் நிறுவனங்களிடமிருந்து தலா ரூ. 01 பில்லியன் இழப்பீடு கோரியுள்ளார்.

இழப்பீடு வழங்பட்படாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.