தலைப்புச் செய்திகள்

களுத்துறையில் மோட்டார் ஷெல்கள் மீட்பு

களுத்துறை – மத்திய சந்தியிலுள்ள பராகும் மாவத்தை பகுதியில் அமைதிருக்கும் ஒரு வீட்டின் தோட்டத்தில் பல மோட்டார் குண்டுகள் (ஷெல்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீடு கட்டுவதற்கான நில அகழ்வுப் பணிகளின் போது, இந்தக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று – பொலிஸார் கூறியுள்ளனர்.

விசேட அதிரடிப் படையின் (STF) உதவியுடன் – சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.