
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக – திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர்கள் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை இன்று (03) பிறப்பித்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆரம்பத்தில் தனது தீர்ப்பை 2026 ஜனவரி 30 ஆம் திகதி வழங்க திட்டமிட்டிருந்தது, ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் உத்தரவு வழங்கத் தயாராக இல்லை என்று தெரிவித்ததால் இன்று (03) வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் 06 பேரை – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


