தலைப்புச் செய்திகள்

கிறீன்லாந்து அமெரிக்காவின் பிரதேசம்; சித்தரிக்கும் படத்தை வெளியிட்டார் ட்ரம்ப்

அமெரிக்காவின் பிரதேசமாக கிறீன்லாந்து 2026ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்டுள்ளது எனச் சித்தரிக்கும் படமொன்றை, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த படத்தில் கிறீன்லாந்து எனக் குறிப்பிடப்பட்ட இடமொன்றில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் – அமெரிக்க கொடியை நடுவது போல் உள்ளது.

கிறீன்லாந்து எமக்கு வேண்டும் என்கிற கோசத்துடன் – அந்த நாட்டைக் கைப்பற்றும் திட்டத்தை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், கிறீன்லாந்தை ஆட்சி செய்யும் டென்மார்க் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கிறீன்லாந்தை அமெரிக்கா வசப்படுத்தும் திட்டத்தை எதிர்க்கும் பிரிட்டன், டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய எட்டு நட்பு நாடுகள் மீது – டிரம்ப் அபராத வரிகளை விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.