தலைப்புச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு தமது கட்சி தயாராகி வருவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், 2026 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை நிலைநாட்டப்படும் என்றும் அவர் சூசகமாகக் கூறினார்.

கிழக்கு மாகாண சபை 2017ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை 2018ஆம் ஆண்டும் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.