
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஒரு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் மற்றும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்குவர் என, சிலுமின பத்திரிகை தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் தாங்களாகவே தங்கள் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், அவரது கட்டளையின் கீழ் உள்ள விசேட புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே – இவ்விடயம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை முதலில் கைது செய்து அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.


