தலைப்புச் செய்திகள்

கட்டுத் துவக்கு வெடித்ததில் 28 வயது நபர் உயிரிழப்பு

கட்டுத் துவக்கு வெடித்ததில் 28 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதவாச்சி – உடும்புகலவத்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தற்செயலாக இந்த துவக்கு வெளித்துள்ளது.

காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடன் இறந்தவர், தானே அந்த கட்டுத் துவக்கை உருவாக்கியிருந்தார் என, முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்த அவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்தார்.

இறந்தவர் மதவாச்சியை வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.