தலைப்புச் செய்திகள்

வீடுகளின் சேத விபரங்களை மதிப்பிடாமல், 05 லட்சம் ரூபாய் வழங்க அரசாங்கம் தீர்மானம்

டித்வா புயலால் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தனிப்பட்ட சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல், ரூ. 500,000 வழங்கப்படும் என்று, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கொபிகனே பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ‘பிரஜா சக்தி’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றி அமைச்சர்; பகுதியளவு சேதமடைந்த 120,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு, ஒரு வருடம் வரை ஆகலாம் என்றும், இதனால் இழப்பீடு வழங்குவது தாமதமாகும் எனவும் கூறினார்.

ஆயினும், முறையான மதிப்பீட்டை விரும்பும் குடும்பங்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகலாம் என்றும், அதன் அடிப்பையில், இழப்பீடு மதிப்பிடப்பட்ட சேதத்தின் அடிப்படையில் நிதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான இழப்பீடு பல மில்லியன் ரூபாயை எட்டக்கூடும் எனவும் அவர் மேலம் கூறினார்.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உடனடி நிதி உதவியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, தனிப்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்யாமல் 05 லட்சம் ரூபாய பணம் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.