
இலங்கையில் டிட்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் இதனைக் கூறியுள்ளார். மேற்படி தொகையில், 350 மில்லியன் டொலர்கள் சலுகை கடன் அடிப்படையிலும், 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானியமாகவும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் இன்று காலை நடந்த கலந்துரையாடலின் விவரங்களை வெளிப்படுத்திய அவர்; இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக கூறினார்.
இலங்கையின் நெருங்கிய அண்டை நாடான இலங்கை, பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நேரத்தில், இந்தியா முன்வந்து உதவியமை இயல்பானது என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

கொழும்பில் இன்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின் போது அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.


