
கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி நேற்று (22) சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்டம் (பட்ஜெட்) வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் முழுமையான பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளாத நிலையில், சிறிய குழுவின் ஆதரவுடன் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக் கொண்டது.
கொழும்பு மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக 60 பேர் வாக்களித்தனர். 57 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
உள்ளூராட்சி சட்டத்தின் கீழ், ஒரு வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தாலும், உள்ளூராட்சி மன்றம் ஒன்று கலையாது, கலைக்கவும் முடியாது.
எனவே, கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடரும்.

ஆயினும், இந்த வரவு – செலவுத் திட்டத்தின் தோல்வி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எதிர்கால காலத்தில் முக்கிய திட்டங்களை மாநகர சபையில் நிறைவேற்றுவதற்கு, இந்த நிலை மிகவும் சவாலாக அமையும்.


