
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தில் சிக்கி 184 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் இந்த மோசமான காலநிலை அனர்த்தம் காரணமாக, 391,401 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


