தலைப்புச் செய்திகள்

டட்லி சிறிசேன 10 கோடி நிதியுதவி

நாட்டில் அனத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிறுவப்பட்ட ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதிக்கு 10 கோடி ரூபாயை டட்லி சிறிசேனவின் – லக்பிமா ரைஸ் மில்ஸ் (பிரைவேட்) லிமிடெட்வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை அரலிய குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேன இன்று (13) காலை ஜனாதிபதி செயலகத்தில் வழங்கினார்.

ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக சனத் குமாநாயக்க டட்லி சிறிசேனவிடமிருந்து காசோலையைப் பெற்றுக் கொண்டார்.

டட்லி சிறிசேன – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரராவார்.