தலைப்புச் செய்திகள்

முன்னாள் சபாநாயகர் வாகன விபத்துக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப், நேருக்கு நேராக கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சபுகஸ்கந்த – டெனிமல்ல பகுதியில் நேற்று இரவு (11) இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் பயணித்த 25 வயது பெண், அவருடைய 06 மாத குழந்தை மற்றும் 55 வயது தாய் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் குழந்தை விசேட சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஜீப்பில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேதமடைந்த ஜீப் மற்றும் கார் ஆகியவற்றுக்கு மேலதிகமாக சம்பவத்தில் சம்பவத்துடன் தொடர்புபட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.