
கலால் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரை, 02 மில்லியன் ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
குறித்த சார்ஜன்ட் – உள்ளூர் மதுபான உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தபோது, அங்கு இயந்திரங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கஞ்சா அரைக்கப்பட்டதைக் கண்டறிந்ததார் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அதற்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக லஞ்சம் கேட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


