தலைப்புச் செய்திகள்

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு 01 மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு –

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

அதன்படி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.

தொடர்பான செய்தி: பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 11 பேர் மரணம்