
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் முகம்மட் ஹில்மி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிதி முறைகேடு குற்றச்சாட்டில் – இவரை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று (25) கைது செய்த பின்னர் – கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியது.
இதனையடுத்து அவரை டிசம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2024 ஆம் ஆண்டு அவர் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராக இருந்த காலத்தில், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு பயிற்சிளிக்க ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில், JSF ஹோல்டிங் என்ற நிறுவனத்திற்கு நியாயமற்ற முறையில் விலைமனுவை வழங்கியதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், அந்த நிறுவனத்திற்கு 05 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரச நிதியை – முறையற்ற ரீதியில் செலுத்துவதற்கு வழிவகுத்தது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


