
தெற்கு கடலில் 06 பேருடன் கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 376 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
100 பொதிகளைக் கொண்ட 05 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 115 கிலோவுக்கும் அதிகமான ஹெராயினும், 200 பொதிகள் கொண்ட 13 சாக்குகளில் 261 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளும், இந்தப் படகிலிருந்து மீட்கப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.
குறித்த படகிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் பெறுமதி 04 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

படகிலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு பத்திரிகைகள், ஒரு ரிவால்வர் மற்றும் ஒரு இரிடியம் செயற்கைக்கோள் தொலைபேசியையும் கைப்பற்றியதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளத
கைப்பற்றப்பட்ட படகுடன் அதிலிருந்த 06 இலங்கை மீனவர்களும் நேற்று (20) மாலை தங்காலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இதனுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டில், பன்னாலையைச் சேர்ந்த – ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


