தலைப்புச் செய்திகள்

நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளில் 30 வீதமானோர் போதைப்பொருள் அடிமைகள்: கணக்கெடுப்பில் தகவல்

படம்: AI

நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கையர்களில் 25% முதல் 30% வரையிலானோர், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப் ஒன்று தெரிவிக்கின்றது.

பாலியல் தொழிலாளில் ஈடுபடும் திருநங்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பொன்று நடத்திய கணக்கெடுப்பின் மூலம் இந்த தகவல் கண்டறியப்பட்டது.

நாட்டில் குறிப்பிடத்தக்க திருநங்கை மக்கள் தொகை இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலோர் திருநங்கை பாலியல் தொழிலை தங்கள் தொழிலாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.

‘அவர்களில் பலர் இந்தத் தொழிலைத் தேர்வு செய்கிறார்கள். ஏனெனில் அவர்களின் பாலின அடையாளம் காரணமாக, அவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பங்களால் ஒதுக்கி வைக்கப்படுவதோடு, அவர்களின் வீடுகளில் இருந்தும் ஒதுக்கப்படுகிறார்கள்.

இந்த தொழிலில் சுதந்திரம் இருப்பதாக அவர்கள் கருகின்றமையினால், இதில் ஈடுபடும் திருநங்கைகளில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), ஹெரோயின், கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிட்டனர்.

திருநங்கைகள் சில சமயங்களில் உடல் ரீதியான துஷ்பிரயோகம், போலி போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள், சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் பொலிஸ் கைதுகளைத் தொடர்ந்து சமூக துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்’ என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸ் தலைமையகத்திற்கு முறையாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வைத்தியசாலைகளில் அனுமதிக்க வேண்டிய அவசர காலங்களில், அவர்களின் பாலின அடையாளம் குறித்து அதிகாரிகளிடையே விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலைகளில், அவர்கள் சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாரின் ஆதரவையும் நாட வேண்டியுள்ளது என – திருநங்கை பாலியல் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பால் பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.