
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர மீது இன்று (22) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் காயமடைந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு – தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட இவர் மீதான தாக்குதல் வெலிகமவில் வைத்து நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் விக்ரமசேகர மீது – துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

காயமடைந்த தவிசாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



