தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயகார கைது

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை, லஞ்ல, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார – இன்று (15) காலை லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த நிலையில் கைதானார்.

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் – இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க மனுஷ நாணயக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்தக் கைதுக்கு முன்னர் – முன் பிணை வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனுவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.