தலைப்புச் செய்திகள்

ஹமாஸ் கையளித்த உடல்களில் ஒன்று, பணயக் கைதியினுடையது இல்லை: இஸ்ரேல் ராணுவம் தெரிவிப்பு

ஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்த நான்கு உடல்களில் ஒன்று, பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட எவருடனும் ஒத்துப்போகவில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த உடல்கள் தொடர்பில், தேசிய தடயவியல் வைத்திய நிறுவனத்தில் பரிசோதனைகள் நிறைவடைந்தமையை அடுத்து, இஸ்ரேல் இந்த விடயத்தைக் கூறியுள்ளது.

“இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு – தேவையான அனைத்து முயற்சிகளையும் ஹமாஸ் எடுக்க வேண்டும்” என்று, டெலிகிராமில் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

ஹமாஸ் ஒப்படைக்கப்பட்ட நான்கு உடல்களில் – மூன்று உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரை இஸ்ரேலிய பணயக் கைதிகளின் 08 உடல்களை – செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஹமாஸ் கையளித்துள்ளது.