
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர், அமைச்சரை இன்று (15) கைது செய்தனர்.
இதனையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, கொழும்பு பிரதரம நீதவான் அசங்க எஸ். போதரகம பிணை வழங்கி உத்தரவிட்டார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்குச் சென்ற அமை்சர் இன்று மாலை கைதானார்
இஸ்ரேலுக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்புவது தொடர்பாக முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேலில் விவசாயத் துறைக்கு தொழிலாளர்களை அனுப்பும் செயல்முறையின் போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேல் அரசுக்கு இடையே நொவம்பர் 5, 2023 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த நிலையில் அப்போதைய தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார, தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப சில நபர்களை நியாயமற்ற முறையில் தேர்ந்தெடுத்து, மற்றவர்களின் வாய்ப்பை இல்லாமலாக்கினார் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

அவ்வாறு செய்வதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு அவர் தேவையற்ற சலுகைகளை வழங்கியதாகவும், மற்றவர்களுக்கு தீங்கு அல்லது இழப்பை ஏற்படுத்தியதாகவும், இது ஊழல் செயல்களுக்குச் சமமானதாகவும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் மேலும் குற்றம் சாட்டியுள்ளது.


