
இஸ்ரேல் மேலும் 45 பலஸ்தீனியர்களின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளன என்று, காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வைத்திய நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளின்படி, வைத்தியக் குழுக்கள் உடல்களை குடும்பங்களுக்கு வழங்குவதற்காக தொடர்ந்து பரிசோதித்து, ஆவணப்படுத்தி – தயார் செய்து வருகின்றன.
இஸ்ரேலியப் படைகள் நேற்று செவ்வாய்கிழமை ஒப்படைத்த, பலஸ்தீனர்கள் சிலரின் உடல்கள் கண்கள் கட்டப்பட்டு, கைவிலங்கு போடப்பட்டிருந்தன என்றும், இது ‘கள மரணதண்டனைகள்’ நடந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது என்றும், வைத்திய வட்டாரங்கள் அல் ஜசீராவிடம் தெரிவித்தன.




