தலைப்புச் செய்திகள்

அரச பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி: 30 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

ரச பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள, 2024ஆம் ஆண்டுக்கான முன்னேற்றம் மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டில் – முந்தைய ஆண்டுடன் ஒப்பிடம் போது, 86,909ஆ குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் மொத்த அரசு பாடசாலைகளின் எண்ணிக்கையும் 30ஆல் குறைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், 3,882,688 மாணவர்களைக் கொண்ட 10,096 அரச பாடசாலைகள் இருந்ததாக அமைச்சின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 10,126 பாடசாலைகள் மற்றும் 3,969,597 மாணவர்களை விடவும் குறைவானதாகும்.

அரச பாடசாலைகளில் 50 வீதத்துக்கும் அதிகமானவற்றில், 200 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.