தலைப்புச் செய்திகள்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 32 பேருக்கு உடனடி இடமாற்றம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 32 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உத்தரவுடன் – உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களில் 26 பேர் பிரதம பொலிஸ் பரிசோதகர்களாவர், 06 பேர் பொலிஸ் பரிசோதகர்களாவர்.

இவர்களில் மொத்தம் 09 பிரதம பொலிஸ் பரிசோதகர்களும், ஒரு பொலிஸ் பரிசோதகரும் பொதுப் பணிகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.